செந்தில் பாலாஜி கைதிற்கு கஸ்தூரி கிண்டல் பதிவு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். செந்தில் பாலாஜி அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயக்க நிலையில் இருக்கும் அவருக்கு ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு
அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயக்க நிலையில் இருக்கும் அவருக்கு ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் மருந்துவனைக்கு சென்று செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். அதில், "முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும். CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே. ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே. கஸ்தூரியின் latest பழமொழிகள் இடுக்கண் வருங்கால் நகுக. இன்கம்டாக்ஸ் ரெய்டு வருங்கால் அழுக. பிரிக்க முடியாதது அரசியல்வாதியும் நெஞ்சுவலியும். பிரிய கூடாதது பாட்டிலும் பத்து ரூபாயும்" என்று பதிவிட்டுள்ளார்.