அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்
2022-23ஆம் நிதியாண்டின் முடிவில் இந்திய அளவில் மாநிலங்கள் வாங்கி உள்ள கடன்கள் வாங்கி உள்ளது என்பதற்கான ஆய்வு முடிவை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி 2022-23ஆம் நிதியாண்டின் முடிவில் தமிழ்நாடு அரசின் மொத்த சந்தை கடன் 87ஆயிரம் கோடியாக உள்ளது.
இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.72 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கள் உடன் மகாராஷ்டிரா 2ஆவது இடத்திலும், 63ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன் மேற்கு வங்க மாநிலம் மூன்றாவது இடத்திலும், 57 ஆயிரத்து 478 கோடி ரூபாய் கடன்கள் உடன் ஆந்திர மாநிலம் நான்காவது இடத்திலும், 55 ஆயிரத்து 612 கோடி ரூபாய் கடன்கள் உடன் உத்தரப்பிரதேசம் ஐந்தாவது இடத்தையும் பிடித்து டாப் 5 லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் மாநில அரசுகள் அனைத்தும் மாநில வளர்ச்சி கடன் எனப்படும் கடன் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் சந்தையில் இருந்து கடன் வாங்குகின்றன.
தமிழ்நாடு அரசு சார்பில் வாங்கப்பட்ட கடன் தொகை அதிக அளவில் மூலதன திட்டங்களுக்கு செலவிடப்பட்டுவதால் கடன் வாங்குவதன் தரம் உயர்ந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளை அடிப்படையாக அவைத்து ஆய்வு செய்யும் இந்தியா ரேட்டிங்க்ஸ் அண்ட் ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.