Category:
Created:
Updated:
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் 1957 முதல் 1967 வரை உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பதவிவகித்தவர் அமைச்சர் கக்கன். இவர் அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் நேர்மையாக செயல்பட்டதற்காக இன்றளவும் எல்லோராலும் போற்றப்படுகிறார்.
இவரது 3 வது மகன் சத்திய நாதன் அரசு மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சென்னையில் காலனியில் வசித்து வந்த அவர், நேற்று தன் வீட்டில் வழுக்கி விழந்து உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.