Category:
Created:
Updated:
திமுக சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் இன்று பேசிய அமைச்சர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏ1 ஆகவும், அவருடைய நெருங்கிய தோழி சசிகலாவை ஏ2 ஆகவும் கம்பி எண்ண வைத்தது திமுகவின் சட்டத்துறை என்று தெரிவித்தார்.
இது, அதிமுகவிமர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’திமுகவின் சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் பேசிய அவசர அமைச்சர், அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும்வரை திமுகவானது மக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டது அவசர அமைச்சரும் அறிந்திருக்கக்கூடும்.