தன்னுடைய மரணத்தை முன்கூட்டியே அறிந்த மருத்துவர்
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் யெபுரி ஹர்ஷவர்த்தனன் ( 33). ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பொது மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
2020 அக்டோபரில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தனது மரணம் உறுதி என்பதை தெரிந்து கொண்டார்.
2020 பிப்ரவரி 12 ந்தேதி தான் சிந்து என்ற பெண்ணை திருமணம் செய்து இருந்தார். முன்பே தன் மரணத்தை தெரிந்து கொண்ட அவர் தனக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினர் சிரமக்கூடது என்பதற்காக அனைத்து பொருளாதார தேவையும் முன்னேற்பாடுகள் செய்து உள்ளார்.
தனது மரணத்திற்கு பிறகு மனைவி தனியாக இருக்கக் கூடாது என்பதற்காக அவரை வற்புறுத்தி விவாகரத்தும் செய்துள்ளார். அக்டோபர் 2022 இல் அவரது பெற்றோர்களுடன் 15 நாட்கள் தங்கியிருந்து விட்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார்.
ஆஸ்திரேலியாவில் மருத்துவர்கள் அவருக்கு வழங்கிய இறப்பு தேதிகளில் ஒன்று மார்ச் 27, 2023 ஆகும். மார்ச் 24 அன்று, காலை அவர் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்ட பிறகு இறந்தார். மேலும் இறந்தபின் தனது உடலை இந்தியா கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் முன்கூட்டியே செய்துள்ளார். அவரது இந்த செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் யெபுரி ஹர்ஷவர்தனின் உடல் தகனம் ஏப்ரல் 5 ஆம் தேதி கம்மத்தில் நடைபெற்றது.