Ads
கர்ப்பிணிகள் மற்றும் முதியோருக்கு முகக்கவசம் கட்டாயம் - கேரள அரசு
இந்தியாவில் சில மாதங்கள் குறைந்திருந்த கொரொனா தொற்று. தற்போது வேகமெடுத்து வருகிறது. எனவே, கொரொனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பலவேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
எனவே, அம்மாநிலத்தில் முதியவர்கள், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் பிற நோயாளிகள் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
சனிக்கிழமை அன்று கேரளாவில் 1801 பேர் கொரொனாவால் பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Info
Ads
Latest News
Ads