நிர்வாண புகைப்படங்களை அனுப்பி தொழிலதிபர்களிடம் பணம் பறித்த மாடல் அழகி சிக்கினார்
இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கு மேல் ஃபாலோயர்களை வைத்துள்ள மாடல் அழகி ஜஸ்னீத் கவுர். இவர் ஏராளமான ஃபாலோயர்களை வைத்துள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்கள், அரை நிர்வாண புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.
இதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் உள்ள தொழிலதிபர்களை குறி வைத்து அவர்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பின்னர் அவர்களுக்கு அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை அனுப்பி பணம் பெற்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது. பணம் கொடுக்காதவர்களை அவர் அடியாட்களை வைத்து மிரட்டும் சம்பவமும் நடந்துள்ளது.
இந்நிலையில் லூதியானாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி ஜஸ்னீத் கவுர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடம் இருந்து விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜஸ்னீத் கவுர் சார்பில் பணம் கேட்டு மிரட்டிய சந்து என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் தன்னை பாலோ செய்யும் தொழிலதிபர்களுக்கு அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை அனுப்பி பணம் பறித்த மாடல் அழகியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.