Ads
பிரதமர் வருகையை ஒட்டி உணவகங்கள் 4 நாட்களுக்கு மூடல்
பிரதமர் வருகையை ஒட்டி முதுமலை புலிகள் காப்பகத்தில் வரும் ஆறாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை அனைத்து ஓய்வு விடுதிகள் உணவகங்கள் மூடப்படும் என முதுமலை புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது.
மேலும் வனவிலங்குகளை காணும் வாகன சவாரி ஏப்ரல் ஏழாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் மோடி ஏப்ரல் ஒன்பதாம் தேதி வருகை தர உள்ளார் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற பொம்மன் பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதை அடுத்து அவரது வருகையால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Info
Ads
Latest News
Ads