கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 4000 வழங்கப்படும் என புதுவை மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி அளிக்க வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் இதுகுறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கப்படும் என்றும் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 2000 நிதி வழங்கப்படும் என்றும் புதுச்சேரி மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.