Ads
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்
ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ நகரில் இன்று மதியம் 2.48 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இந்நிலநடுக்கம் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
Info
Ads
Latest News
Ads