தமன்னாவின் சொத்து மதிப்பு
35 வயது வரை சினிமாவில் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இங்கே காணலாம்.
இந்த ஆண்டு தமன்னா நடிப்பில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்து 100 கோடி வசூல் படமாக மாறியது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் சொதப்பி வந்த நிலையில், சம்மருக்கு வெளியான அரண்மனை 4 திரைப்படம் ஜாக்பாட் அடித்தது. பாலிவுட்டில் வெளியாகி 700 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்த ஸ்ட்ரீ 2 படத்திலும் தமன்னா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசித்து வருகிறார் நடிகை தமன்னா. ஒரு படத்துக்கு 5 முதல் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. அரண்மனை 4 படத்துக்கு இவரது சம்பளம் 8 முதல் 10 கோடி வரை இருக்கும் என்றும் கூறுகின்றனர். நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு 80 முதல் 100 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தமன்னாவின் சொத்து மதிப்பு 125 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்ததாக ஒடேலா 2வில் தமன்னா மாஸ் காட்ட காத்திருக்கிறார். தமன்னாவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர்கள் தொடர்பான சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் பல்வேறு ஊடகங்கள் வெளியாக சேமிக்கப்படும் தகவல் மட்டுமே தவிர அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva