சினிமா செய்திகள்
ஜெயிலர் 2 ......வெளியான தகவல்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர்
சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி
குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம்
பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3
மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெ
35 வயது வரை சினிமாவில் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இங்கே காணலாம்.இந்த ஆண்டு தமன்னா நடிப்
கழுத்தில் சிலுவையுடன் ஸ்ருதிஹாசன்
உலக நாயகனின் மகள் ஸ்ருதிஹாசன் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு படமும் அவர் கைவசம் இருக்கிறது.மேலும் டகோயிட் படத்தில் இருந
பொங்கல் ரிலீசில் இருந்து பின் வாங்கிய வீரதீர சூரன்
செம கெத்தாக வீரதீர சூரன் படத்தில் மிரட்டுகிறார் விக்ரம். தங்கலான் படத்தில் கோமணத்தை கட்டிட்டு வந்த விக்ரமை இப்படி பார்த்தவுடன் ரசிகர்கள் ஆர்ப்பரித்து
சர்ச்சையில் சிக்கிய இளையராஜா
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டார்கோவிலில் நேற்று இளையராஜா அவருடைய ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு மாலையில் நாட்டியஞ்சலி நடைபெற
பாடகி ஸ்ரேயா கோஷலின லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
இந்தியாவில் பல மொழிப் பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். பல மொழிகளிலும் இவர் பாடல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 2002 ஆம் ஆண்டு தேவ்தாஸ் எ
ராதிகா ஆப்தே பெண் குழந்தைக்கு தாயானார்
தமிழில் தோனி படத்தின் மூலம் அறிமுகமான ராதிகா ஆப்தே அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், ஆகிய படங்களில் நடித்தார். சூப்பர்ஸ்டார் ரஜினியின்
அந்த நடிகரின் காலில் விழ நினைத்தேன் - இளையராஜா
50 முறைக்கு மேல் பார்த்த படம்: இந்த நடிகரின் காலில் விழ நினைத்தேன்; இளையராஜா ஓபன் டாக்!இந்த நடிகரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவரின் காலில் விழ
வீர தீர சூரன் பட ரிலீஸ் தேதியில் மாற்றம்
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு பிறகு ஒரு ஹிட் கொடுத்த நடிகர் என்றால் அது விக்ரம். சேது படத்திற்கு முன்பு எத்தனையோ படங்களில் நடித்து அந்த
சிகிச்சைக்கு செல்லும் முன்னர் முடி காணிக்கை செய்தார் சிவராஜ் குமார்
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொ
Ads
 ·   ·  2085 news
  •  ·  1 friends
  • 1 followers

புதிய அரசின் அசமந்தம் - மருத்துவ சேவையை பகுதியளவில் குறைத்து இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ள வேலணை வைத்தியசாலை

வேலணை வங்களாவடி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவை செயற்பாடுகள் ஆளணிப் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு பகுதியளவில் இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் தெரியவருகையில் -

தீவகப் பிரதேசத்தின் இரண்டாவது பிரதான வைத்தியசாலையாகவும் தீவகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுமான குறித்த வைத்தியசாலை கடந்த நல்லாட்சிக் காலத்தில் அன்றைய சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனரத்னவினால் "பி" தரத்திற்கு அவசர அவசரமாக தரமுயர்த்தப்பட்டது.

ஆனாலும் குறித்த தரத்திக்கு ஏற்ப ஆளணி வளங்களை நிவர்த்திக்கும் எந்தவிதமான பொறிமுறையையும் குறித்த அமைச்சர் ஏற்படுத்தவில்லை. அதன் பின்னரும் அமைக்கப்பட்ட அரசாங்கங்களில் இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் உரிய தர்ப்பினரது பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அது கண்டுகொள்ளப்படாத நிலையில் இருந்துவந்தது.

ஆனாலும் இருந்த குறைந்தளவான ஆளணி வளங்களை கொண்டு குறித்த வைத்தியசாலையின் தரத்துக்கு ஏற்ப 24 மணி நேரமும் குறைந்த ஆளணியுடன் சேவை முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக இரு வைத்தியர்களே இவ் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இரவு பகலாக ஓய்வின்றி, தமக்கான விடுப்புகள் இன்றி சேவை செய்யும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தனர்.

இதேபோன்று தாதியர் பற்றாக்குறையும் இவ் வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இதுவும் துறைசார் அதிகாரிகள் கவனத்திற்க்கு பல தடவைகள் கெண்டு செல்லப்பட்ட போதும் அவ்விடயமும் அலட்சியப் போக்காக பார்க்கப்பட்டு கைவிடப்பட்டது.

ஆனாலும் குறித்த வைத்தியசாலையில் மாதாந்தம் 2500 இற்கும் அதிகமான நோயளர்களும் வருடாந்தம் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நோயர்களும் சிகிச்சை பெற்றுவந்ததற்கான ஆதாரங்களும் வைத்தியசாலையின் ஒட்டப்பட்டுள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இதேநேரம் குழந்தை பிரசவ விடுதி உள்ளிட்ட பல சிகிச்சை தொகுதிகளை கொண்டுள்ள இந்த வைத்தியசாலை நெடுந்தீவு, ஊர்காவற்றுறை ,வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு மண்டைதீவு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய தீவகத்தின் மையப்ப குதியில் அமைந்துள்ளதானது நோயாளர்களின் அவசர தேவைகளை நிவர்த்தரி செய்யும் ஒரு நிலையமாகவும் இருந்து வருகின்றது.

அத்துடன் கறித்த வைத்தியசாலைக்கு அவசர நோயாளர் காவி வாகனங்களும் (அம்புலன்ஸ்) பற்றாக்குறை அல்லது இல்லாதத நிலையே காணப்படுவதாகவும் வைத்தியசாலை தரப்பினரால் சுட்டிக்காட்டப்படுகின்றது

இன்னிலையில் வரும் ஜனவரி மாதம்முதல் குறித்த வைத்தியசாலையின் மருத்துவ சேயையை மாலை 6 மணியுடன் நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பாகன அறிவுறுத்தலும் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த செய்தியானது தற்போது புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் புதிய மாற்றங்கள் வரும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த சேவைக் குறைப்பை இடைநிறுத்தி வைத்தியசாலைக்கான ஆளணி வழங்களை நிவர்த்தி செய்து தொடர்ந்தும் வேலணை மக்களுக்கு குறிப்பாக தீவக மக்களுக்கு 24 மணி நேர சேவையை குறித்த வைத்தியசாலை ஊடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் துறைசார் தரப்பினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

  • 1172
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads