Ads
நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் அன்னதானம்; பசியில் முண்டியடித்து சென்றதால் 67 பேர் பலி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா அதிகளவில் வறண்ட பிரதேசமாக இருப்பதோடு, கடும் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கி தவித்து வருகிறது. அங்கு மக்கள் பலர் தினசரி ஒருவேளை உணவுக்கே திண்டாடும் நிலை உள்ளது.
அந்நாட்டின் அனம்ப்ரா மாகாணத்தின் ஒகிஜா நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அன்னதானம் நடத்த தன்னார்வல அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. பசி, பட்டினியால் தவித்த மக்கள் உணவு வாங்குவதற்காக முண்டியடித்து ஓடியதில் கூட்டத்தில் சிக்கி 32 பேர் நசுங்கி பலியாகியுள்ளனர்.
இதேபோல அபுஜாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் அதை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்ததில் நெரிசலில் சிக்கி சிறுவர்கள் உட்பட 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவங்கள் நைஜீரியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Info
Ads
Latest News
Ads