Ads
உப்பு இறக்குமதிக்கு அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச ரீதியில் விலைமனு கோரல்
உப்பு இறக்குமதி தொடர்பாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச ரீதியில் விலைமனு கோரப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக 30 ஆயிரம் மெற்றிக் டன் அயோடின் கலந்த உப்பை இறக்குமதி செய்வதற்குக் கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் உப்பை இறக்குமதி செய்து உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்கள் ஊடாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் உப்பு இறக்குமதி செய்வதற்குப் பொருத்தமான நிறுவனங்களிடமிருந்து விலைமனு கோருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
00
Info
Ads
Latest News
Ads