எக்ஸ்பிரஸ்-பேர்ல்’ விபத்து - அதிகரிக்கும் செலவுகள்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் கடந்த 2021ஆம் ஆண்டு தீப்பற்றியெறிந்த ‘எக்ஸ்பிரஸ்-பேர்ல்’ (MV-X PRESS PEARL) என்ற கப்பலில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் மணிகளை சேகரிக்கும் நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு இறுதி வரையில் 802,016,487 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கணக்காய்வு அலுவலகத்தின்படி, சமூக பங்களிப்பு கொடுப்பனவுகளாக 248,192,250 ரூபாயும், உபகரணங்கள், போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகளாக 553,824,237 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டளவில் நாளாந்தம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மணிகளின் மொத்த அளவு 44 முதல் 20 கிலோகிராம் வரை குறைந்துள்ளது, எனினும், 2023 ஆம் ஆண்டில் சமூக பங்களிப்பிற்காக செய்யப்பட்ட செலவில் 124 இல் இருந்து 106 மில்லியன் ரூபாயாக 18 மில்லியன் ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாக என்று தணிக்கை கூறுகிறது.
கடற்கரையில் அதிக பிளாஸ்டிக் மணிகள் சிதறி கிடப்பதால், கணிசமான எண்ணிக்கையில் துப்புரவு பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும், 2021ஆம் ஆண்டை விட 2022இல் கடற்கரையை சுத்தம் செய்பவர்கள் குறைவாக இருப்பினும், செலவு குறையவில்லை என்றும் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தணிக்கையில் தெரிவித்துள்ளது.
000