Ads
நத்தார் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் பணியில்
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு திறந்த வெளியில் பார்வையாளர்களை காண விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். மேலும், நத்தார் பண்டிகையை முன்னிட்டு 389 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads