Category:
Created:
Updated:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் தற்போது 12 இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. திருமலை பஸ் நிலையத்தில் இருந்து மலை பகுதி முழுவதும் பஸ் ஆங்காங்கே நிறுத்தி பக்தர்களை ஏற்றி இறக்கி செல்கின்றன. தற்போது இயக்கப்படும் பஸ்கள் டீசலில் இயங்கி வருகின்றன.
திருமலையில் அதிகாலை மாசு ஏற்படுவதை குறைக்க தேவஸ்தான அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி திருமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பைகள் பிளாஸ்டிக் அல்லாத காகிதங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பைகள் உபயோகப்படுத்தப்படுகிறது.