Ads
சரிந்து விழுந்த 40 அடி உயர கட் அவுட்
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் பாஜகவினர் வைத்த கட் அவுட்கள் சரிந்து விழுந்தது. விஜய் சங்கல்ப யாத்திரையை ஒட்டி ராபர்ட்சன் பேட்டையில் சுராஜ் மால் சர்க்கிலில் வைக்கப்பட்டிருந்த 40 அடி கட் அவுட் திடீரென பெய்த மழையால் சரிந்து சாலையில் விழுந்தது. மழை பெய்து கொண்டிருந்ததால் சாலை மக்கள் நடமாட்டமின்றி இருந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பாஜக ஆட்சி நடைபெறுவதால் விதிமுறைகளை மீறி கட் அவுட்டுகள் வைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads