Ads
பரோட்டா சாப்பிட்டவருக்கு நேர்ந்த கதி
புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள ஆரியப்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த செல்வராசுவின் கனன் சத்யமூர்த்தி(33). இவர், சென்னையிலுள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
கொரொனா ஊரடங்குக் காலத்தில் இருந்தே வீட்டில் இருந்தே அவர் பணியாற்றிக் கொண்டிருந்ததால் நேற்று மாலை தன் மனைவியுடன் சுல்தான்பேட்டையிலுள்ள ஒரு கடைக்குச் சென்று பரோட்டாவும், பிரைட் ரைஸும் சாப்பிட்டுள்ளனர். பின்னர், இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்து தூங்கினார், விடியற்காலையில், அவர் பேச்சு மூச்சின்றி இருப்பதைப் பார்த்து, குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதுபற்றி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரது இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.
Info
Ads
Latest News
Ads