அதானி ஊழல் குற்றவாளி என்றால், மோடியும் குற்றவாளிதான்: ஆ ராசா
தமிழக முதல்வரின் 70-வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடந்தது. இதில் திமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆ ராசா கலந்து கொண்டு பேசினார். நாட்டு மக்கள் எல்.ஐ.சி மற்றும் ஸ்டேட் வங்கிகளில் முதலீடு செய்துள்ள நிலையில் அந்த பணத்தை எல்லாம் பிரதமர் மோடியின் துணையுடன் அதானி கடனாக பெற்று அனைத்து பொது நிறுவனங்களையும் சொந்தமாக்கி உள்ளார்.
உலக அளவில் 30 வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய அவருக்கு உதவியாக இருந்தது பிரதமர் மோடி தான். அதானி குழுமத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள் 10 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.
இந்திய பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதானி ஒரு குற்றவாளி திருடன் என்றால் அதானியை பல்வேறு வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைத்த பிரதமர் நரேந்திர மோடியும் குற்றவாளி தான் என்று அவர் கூறினார்.