Ads
மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி - தேர்தல் ஆணையர் தகவல்
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான தேர்தல் தேதி விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படவுள்ளது. எனவே, இம்மாநிலத்தில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. இந்த கட்சிகளுடன் ஆம் ஆத்மியும் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, 80க்கும் அதிகமான மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அவர்கள் விரும்பினால், வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தித் தரவுள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads