Ads
ஸ்மார்ட்போன் வாங்கினால் பீர் இலவசம் - கடையில் குவிந்த கூட்டம்
உத்தர பிரதேசத்திலும் தனது ஸ்மார்ட்போன் வியாபாரத்தை விரிவுப்படுத்த வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்மார்ட்போன் விற்பனையாளர் ஒருவர்.
தனது கடையில் ஸ்மார்ட்போன் வாங்கினால் இரண்டு டின் பீர் இலவசம் என அவர் அறிவித்துள்ளார். அறிவிப்பு வெளியானதுதான் தாமதம். பலரும் இலவச பீர் வாங்குவதற்காக செல்போன் கடையில் குவிந்துள்ளனர்.
இதனால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து மக்களை அப்புறப்படுத்தியதுடன் கடை உரிமையாளர் மௌரியா என்பவரையும் கைது செய்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். தொழிலை பெருக்க அறிவித்த இலவசமே கடைக்கு சீல் வைக்கும் நிலைக்கு தள்ளிய சம்பவம் பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
Info
Ads
Latest News
Ads