Category:
Created:
Updated:
கொல்கத்தாவில் இருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் கழிவறையிலிருந்து திடீரென புகை வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் உடனடியாக கழிவறையை திறந்து பார்த்தபோது அங்கு குப்பை தொட்டியில் சிகரெட் துண்டு ஒன்று எரிந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அதை தண்ணீர் ஊற்றி அணைத்த ஊழியர்கள் பிரியங்கா என்ற 24 வயது இளம்பெண்தான் கழிவறையில் புகை பிடித்தார் என்பதை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து விமானம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் போலீஸ் இடம் பிரியங்காவை ஒப்படைத்தனர்.
விமானம் மற்றும் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இளம் பெண் பிரியங்கா நடந்து கொண்டதை அடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.