எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை தீ வைத்து எரித்த பாஜகவினர்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜக நிர்வாகிகள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த பின் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருந்த சிலர் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்வு நடந்த சில மணி நேரங்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியில் உருவப்படத்தை பாஜக நிர்வாகிகள் 4 பேர் தீ வைத்து எரித்தனர். '
எங்கள் முதல்வர் அண்ணாமலை....' 'எடப்பாடி_ஒரு_துரோகி' என்ற போஸ்டரை ஒட்டிய பாஜகவினர் 4 பேரும் அந்த போஸ்டர் முன் நின்று எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை தீ வைத்து எரித்து அவருக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினர் 4 பேரையும் கைது செய்தனர். எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை பாஜகவினர் தீ வைத்து இந்த சம்பவத்தால் அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.