தமிழில் பெயர்ப் பலகை இல்லாவிட்டால் அபராதம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் ஆணைப்படி தொழில் நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2018 முதல் 2022 வரை தமிழில் பெயர் தமிழில் பெயர் வைக்காத 674 கடைகளில் அபராதமாக ரூபாய் 4.58 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் 349 உணவகங்களில் இருந்து 32,800 வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பது குறித்து வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வந்தபோது தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது அதிக அபராதம் விதிக்கப்படும் என்றும் முதல் முறை ஒரு தொகையும் விதிமீறலை மீண்டும் தொடர்ந்தால் அதிக தொகையும் அபராதம் மிதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.