அதிமுக தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் நான்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் 73 சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளங்கோவன் கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இந்த நிலையில் போட்டியிட்ட இளங்கோவன் தவிர இந்த தேர்தலில் போட்டியிட்ட 76 பேர்களில் அதிமுக வேட்பாளர் தென்னரசு மட்டுமே டெபாசிட் பெறுவார் என்றும் மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக வேட்பாளர் 40 ஆயிரம் வாக்குகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் கிடைக்கும் என்ற நிலையில் அவர் 40 ஆயிரம் வாக்குகள் பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் அதிமுக வேட்பாளர் மட்டுமே டெபாசிட் வருவார் என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து மீதமுள்ள 75 வேட்பாளர்களும் டெபாசிட் தொகை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேமுதிக வேட்பாளர் ஆனந்த் சுயேட்சை விட குறைவான வாக்குகள் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.