Category:
Created:
Updated:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மோர்பாளையம் அருகேயுள்ள வட்டூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி, கவிதா, சாந்தி கவிதாவின் தம்பியின் 4 வயது மகள் லக்சனா ஆகியோர் வீரப்பூரில் நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்றுவிட்டு, காரில் திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்தக் காரை ரவி ஓட்டி வந்தார். இந்தக் கார் பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் படமுடிபாளையம் அருகில் சாலை ஓரமாய் நின்று கொண்டிருந்தபோது, ஒரு கண்டெய்னர் லாரியின் பின் பகுதியின் மீது கார் மோதியது.
இதில், காரின் நெருங்கியது. உடனே காரில் இருந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரவி, கவிதை மற்றும் அவர்களின் பெண் குழந்தை ஆகிய 3 பேர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.