Category:
Created:
Updated:
அ.தி.மு.க. பொதுக் குழு வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும், என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்டு. சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் வழங்கிய உத்தரவை உறுதி செய்கிறோம் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறினர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமானது.