Ads
சுமந்திரன், சாணக்கியன் உட்பட பல எம்பிக்கள் சுய தனிமைப்படுத்தலில்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சாணக்கியன் உட்பட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருடன் நாடாளுமன்றில் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் ஆராயும் வகையில் இன்றுகாலை நாடாளுமன்ற சி சி ரி வி கமராக்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
இதன்படி கயந்த கருணாதிலக தலதா அத்துகோரள, மற்றும் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களுக்கு பி சி ஆர் பரி சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அவர்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads