Ads
வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் தற்போது எரிபொருள், எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது : அநுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பார் என நகைச்சுவை கருத்தை சபையில் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் தான் தற்போது எரிபொருள், எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. இதுவே நாட்டின் பொருளாதார உண்மை நிலை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Info
Ads
Latest News
Ads