Ads
பறவை காய்ச்சல் எதிரொலி - 3.10 லட்சம் கோழிகளை அழிக்க உத்தரவு
ஜப்பானில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை அடுத்து அந்நாட்டின் சுகாதாரத் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் பறவை காய்ச்சல் மிக வேகமாக பரவுவதால் மற்ற கோழிகளையும் இந்த நோய் தாக்காமல் இருக்க சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் கோழிகளை அழிக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் மாதத்திலிருந்து பறவை காய்ச்சல் பரவி வருவதாகவும் இதனை தடுக்க இதுவரை மொத்தம் 33 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Info
Ads
Latest News
Ads