Category:
Created:
Updated:
மின் அலகொன்றை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபா செலவு ஏற்படுவதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது மின் அலகொன்றுக்கு சராசரிக் கட்டணம் 29.14 ரூபாவாகும். இதனால் சுமார் 423.5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் 6,709,574 வீட்டு மின்சார நுகர்வோர் இருப்பதாகவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.