தவறான சிகிச்சையால் மரணமடைந்த கால்பந்து வீராங்கனை பிரியா
கால்பந்தாட்ட வீராங்கனையான மாணவி பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர் சோமசுந்தரம், பால் ராம் சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா இன்று (நவம்பர் 15) மரணம் அடைந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவிக்கு சிகிச்சை அளிக்கும்போது கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இதன்படி, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 2 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து மருத்துவ கல்வி இயக்குநர் சாந்திமலர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சோம சுந்தரம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட பால் ராம் சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தி மலர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மாணவி பிரியா மரணம் அடைந்தது மிக மிக துயரமான சம்பவம். இதை அரசியல் ஆக்கக் கூடாது. மாணவி பிரியாவுக்கு ஏற்கெனவே ஓராண்டுக்கு முன்பு காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 2 வாரத்திற்கு முன்பு அதேபோன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 7-ம் தேதி பெரியார் நகரில் புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.