இளம் சமுகத்தினர் மத்தியில் காணப்படுகின்ற போதைப் பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு மிக அவசியமானது என கிளிநொச்சிமாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தில் போதை பொருள் பாவனையை தடுப்பது தொடர்பான மாவட்ட மட்டத்திலான கலந்துரையாடல் ஒன்று இன்று (10-11-2022)மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளதுஇதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார் தொடர்ந்து உரையாற்றுகையில் போதைப் பொருள் பாவனைகளை தனித்து சட்டத்தால் மட்டும் சட்டத்தால் மட்டுமோ அல்லது அதிகாரிகள் மட்டத்திலான செயற்பாடுகள் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியாது என்றும் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படுவதுடன் அதன் பின்னால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாகின்றன குறிப்பாக இள வயது திருமணங்கள் இளவயதுக் கர்ப்பம் குடும்ப வன்முறைகள் என சமூக பிறள்வான நடத்தைகள் இடம்பெறுகின்றன.பிரதேச செயலக மற்றும் கிராமமட்ட அமைப்புகளை வலுப்ப்படுத்தி போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்வதுடன் அவற்றை இனம் கண்டு அதற்கான தீர்வுகளையும் முன்னெடுக்கப்பட வேண்டும் குறிப்பாக உணவு பாதுகாப்பு என்ற விடயம் எல்லாப் பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அதில் இந்த விடயங்களும் மேற் கொள்ளப்படுகின்றன. இளவயது திருமணங்கள் பாலியல் வன்முறை என்பவற்றிற்கும் தொலைபேசி பாவனை ஒரு காரணமாக இருக்கின்றது குறிப்பாக பாடசாலை மட்டங்களிலே அல்லது கிராம மட்டங்களிலே போதைப் பொருள் பாவனை மற்றும் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் அடையாளம் கண்டு அனைத்து துறை சார்ந்தவர்களும் அவற்றை ஒருங்கிணைந்து கட்டுப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் மேற்படி கலந்துரையாடலில் மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சிவனருள்ராஜா உள நல வைத்தியர் ம. ஜெயராசா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கண்டாவளை பச்சிலைப்பள்ளி, பூநகரி, பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.