சட்டவிரோத மணல் அகழ்வு பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளிலும் தாராளம்
கண்டாவாளப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாறு மற்றும் புளியம்போக்கனை பகுதிகளில் பொரும்போக விவசாய நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் ஊடாக சென்று நெற்றலியாட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் பலர் பல அடி தாலத்திற்கு தொண்டப்பட்டு மணல் அகல்வினை ஈடுபட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமது பயிர் நிலையங்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பயிர்செய்கை முடிவடைந்த காலப்பகுதியிலும் வயல் நிலங்களில் பல அடித்தளத்தில் வெட்டி அப்பகுதிகளில் உள்ள மணல்களை தோண்டி எடுக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக தாம் ஒவ்வொரு வருடமும் வயல்களை மீளா புனரமைத்து பயிர்செய்கையில் மேற்கொள்ளப்படுவதாகவும் இது தொடர்பாக கனியவளப் பிரிவினர் இப்பகுதிக்கு வந்து ஒருமுறை பார்வையிட்டு இப்பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இப்பகுதியில் விவசாயிகளின் வேண்டுகோளாக அமைந்துள்ளது.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் விவசாயின் நலனில் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.