திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளே செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் கோவில் சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழிவகுப்பதாக உள்ளதாகவும் அதனால் செல்போன் தடை முக்கியம் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
கோயில் அர்ச்சகர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் இந்த பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விரைவில் திருச்செந்தூர் கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும் உத்தரவை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.