ஆட்கடத்தல் காரர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி, ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு கனடா செல்ல முற்பட்டவர்களின் நிலை.
306 பேருடன் இலங்கையிலிருந்து கனடா நோக்கி புறப்பட்ட சட்டவிரோதப்புகழிட கோரிக்கையாளர்கள் பயணித்த படகு பிலிப்பைன்ஸிற்கும் வியட்னாமுக்கும் இடையிலான கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நிலையில் சிங்கப்பூர் கடலோர காவல் படையினர் மீட்டுள்ளதாக வெஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.300 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை வியட்னாமுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த படகில் இலங்கையர் ஒருவர் இருப்பது தொடர்பில் தாங்கள் முன்னதாகவே அறிந்து கொண்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டீ.சில்வா தெரிவித்துள்ளதாக அந்த Washington post செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏணையவர்கள் வியட்னாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் அவர்கள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்தவர்கள் தங்களை காப்பாற்றும்படி அபய குரல் எழுப்பி அதன் ஒலிப்பதிவினை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதன் பின்னர் அவர்களை காப்பாற்றும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது
நேற்றைய தினம் இவர்கள் 300 பேர் சிங்கப்பூர் கடலோர காவல்படையினரால் பிலிப்பைன்ஸுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.ஆட்கடத்தல் காரர்களின் பொய்யான வாக்குறுதிகளை கஷ்டப்பட்டு உழைத்த உங்கள் பணத்தினை கரியாக்காதீர்கள். நேர்மையான வழியில் செல்ல முயற்சி செய்யுங்கள்.ஆட்கடத்தல் காரர்களின் பேச்சு எப்பொழுதும் உங்களை நம்ப வைக்கும். அவர்களின் இலக்கு உங்கள் பணம்.