Category:
Created:
Updated:
பாராளுமன்றத்தில் நியமிக்கப்படவுள்ள 17 துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கான சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (08) அறிவித்தார்.
அதேபோன்று, நியமிக்கப்படவுள்ள குழுக்கள் தொடர்பில் இன்றைய தினத்தில் இறுதித்தீர்மானத்துக்கு வந்து அனைத்துப் பணிகளையும் ஆரம்பிப்பதற்கு அவசியமான ஆதரவை வழங்குமாறு சபாநாயகர் அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தார்.