Category:
Created:
Updated:
இந்த மாதத்துக்கான பௌர்ணமி நேற்று தொடங்கிய நிலையில் நேற்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
நேற்று மாலை 4.44 மணிக்கு பவுர்ணமி தொடங்கிய நிலையில் மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இடையே மழை பெய்த போதிலும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்ற காட்சியை பார்க்க முடிந்தது.
கிரிவலம் சென்ற மக்கள் அதன் பின்னர் அருணாசலேஸ்வரர் கோயிலில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் சிறப்பாக செய்து இருந்தனர்.