Category:
Created:
Updated:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பனையங்கால் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு நேற்று குழந்தைகள் கவ்யா (வயது4), ஜான்சன் (2), ரெனீஸ் வருண் (3), தர்ஷன் (4), பெத்ரு பாண்டியன் (2), தன்சிகா (2), மிகாயான் (2) ஆகியோர் சாப்பிட்டுள்ளனர். மேலும் அங்கு சென்றிருந்த பெற்றோர் தேவிகா (30) ஜென்சியா (27) ஆகியோரும் உணவை ருசித்துள்ளனர். அப்போது உணவில் பல்லி இறந்து கிடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே உணவு சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 9 பேரையும் வாகனத்தில் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து கீழக்கரை தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர்.