Category:
Created:
Updated:
இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர்.இந்த விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் உள்ளதாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்கள் அங்கிருந்து தகவல்களை அனுப்பி வைத்துள்ளதுடன், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.