Category:
Created:
Updated:
பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலைகள் 300 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடதாசி மற்றும் அச்சீட்டு நடவடிக்கைகளுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே, குறித்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.அத்தோடு, உலக சந்தையில் கடதாசியின் விலை அதிகரிப்பு, இலங்கையின் வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகிய காரணங்களினால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.