வேரவில் கிராஞ்சி வலைப்பாடு ஆகிய கிராமங்களுக்கான பிரதான வீதி பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் போக்குவரத்துக்கள் யாவும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளாக பிரதேச தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர்பிரிவிற்குட்பட்ட வேரவில் கிராஞ்சி வலைப்பாடு ஆகிய கிராமங்களுக்கான பிரதான வீதி இதுவரை சொப்பனிடப்படாததால் மக்கள் போக்குவரத்தில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன் தற்போது பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் போக்குவரத்துக்கள் யாவும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளாக பிரதேச தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வலைப்பாடு வேரவில் பொன்னாவெளி கிராஞ்சி சிவபுரம் ஆகிய கிராமங்களுக்கான ஒரே ஒரு பாதையாக காணப்படுகின்ற பல்லவராயன் கட்டு வேரவில் வீதி சுமார் 45 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் ஐ றோட்த் திட்டத்தின் கீழ் குறித்த வீதி புனரமைப்புக்காக தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அதன் புனரமைப்பு பணிகள் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளன இவ்வாறு கைவிடப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இவ்விதியின் மூன்று இடங்களில் வெள்ள நீர் குறுக்கறுத்து பாய்ந்ததுடன் நீண்ட நாட்களுக்கு வெள்ளமும் தேங்கி காணப்பட்டதுடன் இந்தப் பகுதிக்கான போக்கு வரத்துக்கள் உழவு இயந்திரங்களிலேயே மேற்கொள்ளப்பட்டன.குறித்த வீதி நிரந்தரமாக புனரமைக்கப்படாத நிலையில் இங்குள்ள மக்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் குறிப்பாக இந்த வீதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமையினால் வேரவில் வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் சென்று வருவதற்கும் அங்கிருந்து அவசர நோயாளிகளை முழங்காவில் வைத்தியசாலைகோ அல்லது கிளிநொச்சி வைத்தியசாலைக்கோ அல்லது பிற வைத்தியசாலைகளுக்கோ கொண்டு செல்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதேவேளை இந்த வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாமையினால் குறித்த பிரதேசத்திலிருந்து சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நோயாளிகள் பலர் இடைநடுவில் உயிரிழந்ததாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர் இவ்வாறு 45வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாது இருக்கின்ற வீதி கடந்த ஆண்டில் புனரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதும் அந்த வீதி புனரமைக்கப்படவில்லை இதனால் தாங்கள் தொடர்ந்தும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.