உலகம் முழுவதும் பொய்களை பரப்புவதற்காக எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியுள்ளார்: ஜோ பைடன்
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கினார். இந்த நிலையில், எலான் மஸ்க் பொய்களைப் பரப்புவதற்காகவே டுவிட்டரை வாங்கியுள்ளார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் பேசுகையில், "நாம் அனைவரும் இப்போது எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதை பற்றியே கவலைப்படுகிறோம். உலகம் முழுவதும் பொய்களை பரப்புவதற்காகவே எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியுள்ளார். டுவிட்டரில் இனி எடிட்டர்கள் இல்லை. அதில் ஆபத்தில் இருப்பதை குழந்தைகள் எப்படி புரிந்துகொள்ள முடியும்" என்றார்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் இன்று கூறுகையில், ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் சமூக ஊடக தளங்களில் வெளியாகும் "வெறுக்கத்தக்க பேச்சு" மற்றும் "தவறான தகவல்கள்" ஆகியவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.