சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

விவசாய உதவித்திட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுங்கள் சிவஞானம் சிறீதரன் அனுப்பியுள்ள கடிதம்

விவசாய உதவித்திட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுங்கள் - என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று (01-11-2022) அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.அக்கடித்த்தில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தினால் (Food and Agriculture Organization of the United Nations) வடக்கு மாகாணத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஒரு அந்தர் அசேதனப் பசளையும் முப்பதாயிரம் ரூபா நிதியுதவியும், 2.5 ஏக்கருக்குக் குறைவான நிலப்பரப்பில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு அந்தர் அசேதனப் பசளையும் வழங்கும் உதவித் திட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் (2022.10.31) கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் மேற்படி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள போதும், கிளிநொச்சி மாவட்டத்தில் FAO நிறுவனத்தினால் கோரப்பட்டதற்கு அமைவாக வறிய விவசாயிகள் எவருமில்லை என்றும், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் நெற் செய்கையில் ஈடுபடுவதோடு மிகை அறுவடையைப் பெறுபவர்களாக உள்ளதாகவும் 2022.02.28 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தவறான உற்பத்தித் தரவுகளே, எமது மாவட்ட விவசாயிகளுக்கான உதவித் திட்டம் நிராகரிக்கப்படக் காரணம் என பாதிக்கப்பட்ட விவசாய அமைப்புக்கள் என்னிடம் சுட்டிக்காட்டியுள்ளன.கடந்த 2022.10.20 ஆம் திகதிய பத்திரிகைச் செய்திகளில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9,971 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தரவுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் அண்ணளவாக நான்கில் ஒரு பகுதியினர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ள சமநேரத்தில், இந்த மாவட்டத்தில் வறிய விவசாயிகள் எவரும் இல்லை என, பொறுப்பற்று சமர்ப்பிக்கப்பட்ட பொய்யான தரவுகளால், ஏற்கனவே எரிபொருளின்மை, உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள எமது மாவட்டத்தின் விவசாயிகள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தினரால் எனக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் FAO நிறுவனத்தினால் குறித்துரைக்கப்பட்டதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தின் 10 கமநல சேவை நிலையங்களின் கீழும் மிகை வறுமையிலுள்ள விவசாயிகளில், ஒரு ஏக்கருக்கு குறைவான நிலப்பரப்பில் 1,523 விவசாயிகளும், 1 - 2.5 ஏக்கருக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் 6,237 விவசாயிகளும் இவ்வருடம் காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் 2022.02.08 ஆம் திகதிய மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் தொடர்புடைய அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் தவறானவை என தாம் சுட்டிக்காட்டியிருந்தபோதும் அதற்கு உரிய தரப்பினர் செவி சாய்க்கவில்லை என இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.இந்த மாவட்டத்தின் முதுகெலும்புகளாக உள்ள எமது விவசாயிகள் மேலும் பாதிக்கப்படாத வகையில், முறையான தரவுகளை மீள சமர்ப்பிப்பதன் மூலம், மேற்படி உதவியைப் பெற தகுதியிருந்தும் நிராகரிக்கப்பட்டுள்ள 7,760 விவசாயிகளுக்கும் இவ் உதவித் திட்டத்தைப் பெற்றுக்கொடுக்க ஆவனசெய்யுமாறு – கோரியுள்ளார்.

  • 284
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads