Category:
Created:
Updated:
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விழாவோடை கிராமத்துக்கு செல்லும் பாலம் மற்றும் வீதி என்பன கடந்த 2019இல் ஏற்பட்ட கால வெள்ளம் காரணமாக சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டதையடுத்து இராணுவத்தினரால் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டிருந்த்து. இந்த நிலையில் குறித்த பாலமும் வீதியும் புனரமைக்க படாத நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் பாலம் மற்றும் வீதி என்பன ஆபத்தான நிலையில் காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இராணுவத்தினரின் உதவியுடன் பாலத்தின் இருமருங்கும் மண் மூடைகள் அடுக்கி புனரமைக்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.