Category:
Created:
Updated:
பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை ரீதியிலான பெண்களுக்கான கபடிப்போட்டியில் 17வயதுப்பிரிவில் சம்பியனாகிய உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை அணியையும் 20வயதுப்பிரிவில் சம்பியனாகிய உருத்திரபுரம் மகா வித்தியாலய அணியையும் கெளரவிக்கும் நிகழ்வு இன்று(31-10-2022) இடம்பெற்றது.
உருத்திரபுரம் உழவர் ஒன்றிய விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கூழாவடி சந்தியிலிருந்து வீராங்கனைகள் பாடசாலைகளின் அதிபர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மாலை அணிவித்து பாண்ட் வாத்திய இசையுடன் பாலையடி அருட்செல்வ விநாயகர் ஆலயம் வரை அழைத்து செல்லப்பட்டு வீராங்கனைகள் பொன்னாடைபோர்த்தி கெரவிக்கப்பட்டனர்.
குறித்த கெளரவிப்பு நிகழ்வில் பெற்றோர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.