கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலேயே ஐந்து வயதிற்குட்பட்ட அதிகளவான சிறார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின்விலையற்றம் தொழில் இழப்பு என்பவற்றால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் இவ்வாறான குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஐந்து வயதிற்குட்பட்ட 576 வரையான சிறார்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் கானப்படுவதாக பிரதேச செயலகங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களில் கண்டறியப்பட்டுள்ளது.அதாவது கரைச்சி பிரதேச செயலாளார் பிரிவில் 48 சிறார்களும் கண்டாவளை பிரதேச செயலாளார் பிரிவில் 128 சிறார்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 108 சிறார்களும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 292 சிறார்களுமாக சுமார் 576 வரையான ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்கள் இவ்வாறு ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதுடன் இதில் புனகரி பிரதேசத்திலேயே அதிகளவானசிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 581 கர்ப்பிணித் தாய்மார்களும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 48 கற்பிணி தாய்மார்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 62 கர்ப்பிணி தாய்மார்களும் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவில் 93 கர்ப்பிணி தாய்மார்களுமாக சுமார் 784 கற்பினித் தாய்மார்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது வறுமைக்கோட்டின் கீழ் நாளாந்த தினக்கூலி வேலை செய்து வழும் குடும்ாங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டிருக்கின்றது.