கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட கனகராயன் ஆற்றுப் பகுதியை துப்புரவு செய்யும் செயல் திட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசு அதிபர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
அதிக நீர் நிலைகளைக் கொண்ட மாவட்டமாக காணப்படுகின்ற கிளிநொச்சி மாவட்டத்தில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறுபட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன அவ்வாறான பாதிப்புகளை குறைக்கும் வகையில் நீர் வழிந்தோடக்கூடிய கழிவு வாய்க்கால்கள் ஆறுகள் என்பவற்றை துப்புரவு செய்யும் வேலைத்திட்டங்கள் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனரத்த முகாமைத்துவப் பிரிவு என்பவற்றால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்தின் கழிவு நீர் வழிந்தோடும் கண்டாவளை கனகராயன் ஆற்றினை துப்பரவு செய்யும் பணிகள்(25-10-2022) இன்றைய தினம் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த பிரதேசத்தில் வெள்ளத்தினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைக்கும் விதத்தில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் சர்வோதயம் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் குறித்த வேலை திட்டம் உத்தியோக புர்வமாக இன்று பகல் 11 மணிக்கு கண்டவளைக்கமக்கார அமைப்பினுடைய தலைவரும் முன்னாள் கிராம சேவையாளருமான சி.பரமதாஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.மேற்படி நிகழ்வில் அனர்த்த முகாமைத்து பிரிவின் மாவட்ட பணிப்பாளர் இரணைமடு நீர் பாசன பொறியியலாளர் செந்தில் குமரன் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் சர்வோதயம் நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.