Category:
Created:
Updated:
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரநெருக்கடி பொருட்களின் விலையேற்றம் என்பன தொழில் வாய்ப்பற்ற குடும்பங்களையும் பெண்களமைத்துவ குடும்பங்களையும் பெரிதும் பாதித்துள்ளன.
குறிப்பாக அரிசி சீனி கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் குறைக்கப்பட்ட விலைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது இருப்பதாகவும் தெரிவித்துள்ள இப்பகுதி மக்கள் அன்றாடம் ஒரு நேர உணவை கூட உண்ணக்கூடிய நிலையில் தாங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக வாழ்வாதாரத்துக்காக எந்த ஒரு பயிர் செய்கைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் எரிபொருட்களின் விலையேற்றம், காரணமாக பெரிதும் பாதித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.